வீடு கட்ட உதவும் Sweet Home 3D இலவச மென்பொருள்

Date:

கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக இலவசமாகக் கிடைக்கும் உட்கட்டமைப்பு மென்பொருள் ஒன்று உங்களுக்கு வீடு கட்ட உதவக்கூடும். நீங்கள் புதிதாக வீடு கட்டும் எண்ணத்தில் இருந்தால், இந்த Sweet Home 3D மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள்.

GurkanIlginஇந்த மென்பொருள் மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும். அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாணத்  தோற்றத்தையும் நமக்குத் தரும். மேலும் கதவு, ஜன்னல் போன்றவற்றை பில்ட் இன்னாகவே (Built-in) வைத்திருப்பது இந்த மென்பொருளின் சிறப்பாகச் சொல்லலாம். கட்டில், நாற்காலி போன்ற உள்ளலங்காரப்  பொருட்களின் தரம் மற்றும் அளவுகளை பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால், நம் தேவைக்கேற்ப பொருத்திப் பார்த்து,  அறையின் அளவுகளை மாற்றிக் கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது.

hqdefaultநீங்கள் ஆட்டோகேட் (Auto Cadd) அல்லது 3D Home Architect உபயோகித்திருந்தால் இந்த மென்பொருளை உபயோகிக்க எந்த வித சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள் உபயோகிப்பதற்காக ஒரு சிறிய அறிமுக விளக்கம் இதோ.

  • இதில் உள்ள அளவுகள் அனைத்தும் செமீ -ல் உள்ளீடு செய்ய வேண்டும். 10அடிக்கு 10 அடி எனில் அதை முதலில் செமீ-க்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி = 305 செமீ.
  • மேல் வரிசையில் Plan மெனுவில் Create Walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஒரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது.

sweet home 3d exterieur uncategorized best home design 3d software prime within avec sweet of sweet home 3d

 

  • எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ? அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயரத்தை மாற்றி கொள்ளலாம்.
  • சைடு பாரில் (Side Bar) இருக்கும், டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை (Doors and Windows option) பயன்படுத்தி தேவைப்படும் கதவைத் தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். ஜன்னலிற்கும் இதே முறையில் செய்யுங்கள்.

the best 3d home design software the best 3d home design software sweet home 3d the best free home set

 

  • இதில் படுக்கையறை , குளியலறை, சமையலறை மற்றும் வரவேற்பறைகளுக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள் அனைத்தும், மென்பொருளிற்குள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து வைத்துப் பார்த்துக்  கொள்ளலாம்.
  • எடிட் ஆப்ஷனைத்  தேர்வு செய்து நமக்குத் தேவையான அளவுகளை மற்றும் நிறங்களை மாற்றிப் பார்த்துக் கொள்ளலாம்.

புதிதாக வீடு கட்டப் போகிறவர்கள் மற்றும் வீடு கட்டிக்  கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான மென்பொருள். குறிப்பாக உள்ளலங்கார வடிவமைப்பிற்கு இது மிகவும் உபயோகமான மென்பொருள். இது முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது. இந்தச்  சுட்டியில் அந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!