மழைக்காலம் என்றால் வெளியே சென்றால் மட்டுமல்ல வீட்டுக்குள் இருந்தாலும் பிரச்சனைகள் தேடி வரும். அவற்றுள் ஒன்று தான் வீட்டின் சில இடங்களில் நீர் கசிவது. குறிப்பாக ஜன்னல் இடுக்குகளில்.மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வீட்டைத் தயார் படுத்தி விட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்க முடியும். மழைக்காலம் ஆரம்பித்த பிறகு, அடித்துப்பிடித்து அனைத்தையும் சீர் செய்வதற்குப் பதிலாக இப்போதே சீர் செய்வது நல்லது.
இது உங்கள் வீட்டு ஜன்னல்களில் நீர்க் கசிவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் கட்டுரை.
1. சட்டகம் (Frame) மாற்றுவது!
மிகவும் பழைய ஜன்னல்கள் என்றால் அல்லது உறுதியற்ற நிலையில் ஜன்னல் இருக்கிறது என்றால் மாற்றிவிடுவது தான் நல்லது; இனிமேல், யுபிவிசி (uPVC), உலோக ஜன்னல்களைப் பயன்படுத்தலாம். இந்த ஜன்னல்களில் தேங்கும் மழை நீர், வீட்டுக்குள் வராமல் வெளியேறிவிடும். சட்டகப் பகுதிகள் உட்புறப் பிரிவுகளுடன் இந்த ஜன்னல்களில் உள்ளதால் மழைநீர் கசியாது.

2. Weatherstrip Tape
ஜன்னல்களின் பலகைகள், சட்டகங்கள்(Frames), கதவுகள் என நீர் கசிய வாய்ப்புள்ள இடங்களில் Weatherstrip Tape வைத்து ஒட்டிவிடுங்கள்.
உங்களுடைய ஜன்னலுக்குப் பொருந்தும் Weatherstrip Tape தேர்ந்தெடுப்பது முக்கியம். ரப்பர், Foam, வினைல் போன்ற பொருட்களில் டேப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த டேப்பை சாதாரண டேப்பை ஒட்டுவதைப் போல ஜன்னல்களில் எளிமையாக ஒட்டமுடியும். ஜன்னல்களின் உட்புறத்திலும் ஒட்டலாம். இது அமேசான் தளத்தில் கிடைக்கிறது. இந்த இணைப்பை கிளிக் செய்து, பொருளைப்பற்றி படித்துப்பார்த்து உங்கள் ஜன்னலுக்கு பொருத்தமானதை வாங்கி பயன்படுத்தலாம்.
3. கால்க் துப்பாக்கி
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே இவற்றை உபயோகிப்பது சிறந்தது. ஏனெனில் இது பயன்படுத்திய பின்னர் நன்றாக காய 24 மணி நேரமாகும்.
கால்க் துப்பாக்கி (Caulk Gun) ஜன்னல்களின் Frame-ல் இருக்கும் இடைவெளிகளை அடைக்க பயன்படுத்தக்கூடியது. இது ஹார்ட்வேர் கடைகளில் கிடைக்கும்; அமேசான் தளத்திலும் வாங்கலாம்.
கால்க் துப்பாக்கியை நாமே பயன்படுத்தலாம் என்றாலும் அதற்கு சில பொருட்கள் அவசியம். இல்லையேல் தொழில்முறை வல்லுநர்களை அழையுங்கள்.
இது பற்றிய வீடியோ!
4. Foam Spray
ஜன்னல்களில் இருக்கும் ஓட்டைகளை அடைப்பதற்கு Foam Spray பயன்படுத்தலாம். சிலர் பிற வழிகளைவிட Foam Spray சிறப்பானது என்று கூறுகின்றனர். இதற்கு தொழில்முறை வல்லுநர்களைப் அணுகுவது தான் நல்லது. இது பற்றிய வீடியோ!
தீவிர மழைக்காலம் தொடங்கும் முன் இவற்றில் ஏதாவது ஒன்றை செய்து நீர்க்கசிவை தடுத்துவிடுங்கள்!
Featured Image Credits : homele.ru