கட்டடம் இப்படியும் கட்டலாம் – சீன பொறியியலாளர்கள் சாதனை!!

Date:

பாலத்தைத் தரையில் பாத்துருப்பீங்க, தண்ணீரில் பாத்துருப்பீங்க, ஏன் தண்ணீருக்கு அடியில கூட பாப்பீங்க (நார்வே). ஆனால் ஒரு கட்டிடத்திற்கும் மற்றொரு கட்டிடத்திற்கும் இடையே ஒரு பாலத்தை பாத்திருக்கீங்களா?. சீனாவில் பார்க்கலாம். ஆனால் அது சாதாரணப் பாலமல்ல. உலகில், 820 அடி உயரத்தில் கட்டப்படும் முதல் நீளமான கிடைமட்ட ஸ்கைஸ்கிராப்பர் (Skyscraper). உயரமான கட்டிடத்தையே இவ்வாறு கூறுவர் ஆங்கிலத்தில்.

raffles-city-chongqing
Credit: CNN

Horizontal Skyscraper

சீனாவில் உள்ள Raffles City Chongqing நகரில்தான் இந்த பொறியியல் அற்புதம் எழும்பிக்கொண்டிருக்கிறது. Chongqing project எனப்படும் இந்த கட்டுமானம் மொத்தம் எட்டு ‘நிற்கும்’ கட்டிடங்களை உள்ளடக்கியது. தலைக்கணத்தோடு நிற்கும் ஆறு கட்டிடங்களின் உயரம் 820 அடி. அங்க என்ன சத்தம்? என்று கேட்கும் மீதம் இரண்டின் உயரம் 1148 அடி. ரசிகர்கள் மீது தாவிய ரன்வீர் சிங் போல ஒன்பதாவது கட்டிடம்தான் இப்படி அரங்கநாதனாக வீற்றிருக்கிருக்கிறது. நாம் நினைத்துப் பார்க்ககூட முடியாத அளவிற்கு இயற்பியல் சமன்பாடுகள்  மற்றும் இயற்கைத் தடைகளைத் ஊதித்தள்ளி இந்த சாதனை நடத்தப்பட்டுவருகிறது.

2003 ஆம் ஆண்டில் “சார்ஸ்” நோய் வெளிப்பட்டபோது 1000 படுக்கை கொண்ட மருத்துவமனையை இரண்டே வாரத்தில் கட்டி, சார்ஸ் கிருமியையே திகைக்க  வைத்தவர்களுக்கு இது எம்மாத்திரம்.

கண்ணைக் கட்டுதப்பா

2012 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி, இதோ இந்த அக்டோபர் இறுதியில் ரிப்பன் வெட்ட உள்ளனர். 1.12  மில்லியன் சதுர அடியில் சுமார் 170 கால்பந்து மைதானங்களின் பரப்பில், பரந்த அஸ்திவாரத்துடன் இந்த Multipurpose mall வளர்ந்து வருகிறது. 23,000 சதுரடி பரப்பில் ஒரு ஷாப்பிங் மால், 1400 ஹை-டெக் அபார்மென்டுகள், 1.65 லட்ச சதுரடியில் அலுவலகங்கள் என ஒரு தொழிற்சாலை அல்லாத சென்னையே இந்த நவீன கோபுரங்களில் அடக்கம். இதெல்லாம் ஏற்கனவே ‌அனைத்து பெரிய கட்டிடத்திலும்தானே இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? உண்மைதான். ஆனால் உள்ளதை உள்ளபடி டூப் அடிப்பது சீனாவின் ரகமல்லவே. இது முற்றிலும் வித்தியாசமானவை‌. சீனாவின் பழங்கால வர்த்தகக் கப்பல்களின் வடிவத்தை, இஸ்ரேலிய கட்டுமான கலைஞர் Moshe sofdie அவர்களின் கைவண்ணத்தில்  இப்படி இடைவெளியிட்ட கட்டிடங்களால் நினைவுகூர்கிறார்கள்.

raffles-city-chongqing---image2
Credit: CNN

250 அடி நீளமுள்ள “crystal complex” எனப்படும் இந்தப் பாலம் (air corridor) தனது இருமுனைகளிலும் மிகப்பிரம்மாண்டமான திறந்தவெளித் தோட்டத்தைக் கொண்டுள்ளது. இதற்காகவே மரங்களை வளர்த்து மாடிக்கு அனுப்பியுள்ளனர்.  பற்பல வேடிக்கை மையங்கள் மத்தியில் Infinity நீச்சல் குளமொன்று (Infinity pool- என்பது சுற்றிலும் கடல் அனுபவத்தைத் தரும் பிரம்மாண்ட நீச்சல் குளமாகும்) தயாராகிறது. இவ்வளவு உயரத்திற்கு அவ்வளவு தண்ணீரைத் தானமாக வழங்க அருகிலேயே இரண்டு ஆறுகள் (yangtze, jialing) ஒன்றாக இணைகின்றன. இது மட்டுமா? இரவின் அந்தகாரத்தில் இதனைப் பார்ப்பது நிச்சயம் கண்களுக்கு நல்லதல்ல. பளீச் பளீச். கண்கூசச்செய்யும்  இந்த கோபுரங்களை அலங்கரிக்க மட்டுமே 12,000 டன் எடையில் கண்ணாடித் தட்டுகள் தேவைப்படுகின்றன. ஒருவர் இதில் குடியேறினால், தன் அந்திம காலத்தில் மட்டும் இறங்கினால் போதுமானது. எமனுக்கும் இந்த செயற்கை நவகிரகங்களை சுற்றிப் பார்க்கும் பலன் கிடைக்கும்.

எதற்காக இத்தாம் பெருசு

சீனாவில் Chongqing நகரம் ஒரு முக்கிய தொழில் வர்த்தக நகரமாகும். மக்கள்தொகை, இடநெருக்கடி என்ற பிரச்சினைகளால் வளர்ந்த நாடுகள், இப்படிதான் ஒரு ஊரையே ஒரு கட்டிடத்திற்குள் போட்டு அடைத்துவிடும். இப்பிரம்மாண்ட பேர்சொல்லிகள் பல ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பை நீண்டகாலத்திற்கு வழங்குபவை.

raffles-city-chongqing---image3
Credit: CNN

இன்னும் சில ஆண்டுகளில்  impossible புகழ் ஈதன் ஹன்ட் அதாங்க, நம்ம டாம் க்ரூஸ்  இந்த கட்டிடத்தில் தொங்கியபடி எதிரியை துவம்சம் செய்துகொண்டிருப்பார் வெள்ளித்திரையில். இல்லையில்லை தமிழ்ராக்கர்ஸில். ஆனால் அவர் அமெரிக்கர் ஆயிற்றே…….

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!