சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள செட்டிநாடு பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய செட்டிநாடு வீடுளில் ஒன்று ஆயிரம் ஜன்னல் வீடு. காரைக்குடியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. இப்பகுதியில் உள்ள வீடுகள் சுண்ணாம்புக் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் கட்டமைப்பு, கட்டிடக் கலை சிறப்பின் காரணமாக காரைக்குடியை பாரம்பரியம் மிக்க நகரம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
1000 ஜன்னல் வீடு, பிரமாண்டமான காற்றோட்டமிக்க வகையில் அமைந்துள்ளது. இந்த வீடு 20,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 25 விசாலமான அறைகளும், 5 நீண்ட பொது அறைகளும்(Hall), 20 கதவுகளும், 1000 ஜன்னல்களும் உள்ளது. வீட்டின் சாவியே 1 அடி நீளம் கொண்டுள்ளது.
பர்மா தேக்கு மரங்களைக் கொண்டு, ஆத்தங்குடி மற்றும் இத்தாலிய சலவை கற்களைக் கொண்டு தரை வேலைப்பாடுகள் அமைந்துள்ளது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து வண்ண பூச்சுக்களும், ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட விளக்குகள் இவ்வீட்டிற்கு அழகிற்கு அழகு சேர்க்கின்றன.
1941 ஆம் ஆண்டில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் இந்திய ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
ஆயிரம் ஜன்னல் வீட்டின் ஜன்னல்கள்

ஆயிரம் ஜன்னல் வீட்டின் வாசல்

ஆயிரம் ஜன்னல் வீட்டின் மேற்கூரை

ஆயிரம் ஜன்னல் வீட்டின் சாவி

Also Read: [புகைப்பட தொகுப்பு]: மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை..
தமிழகத்தில் இருக்கும் கேரளாவின் கவிதை! எழில் மிகுந்த பத்மநாபபுரம் அரண்மனை!
பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும் கலைநயமிக்க செட்டிநாட்டு வீடுகள்