சுமார் 67 மில்லியன் ஆண்டு கால டி-ரெக்ஸ் (T-Rex) புதைபடிவம் (Fossil) 232 கோடி ரூபாய்க்கு (31.8 மில்லியன் டாலர்) ஏலத்தில் விற்கப்பட்டது.
உலகில் புதைபடிவத்தின் அருங்காட்சியகத்தில் தலைசிறந்து விளங்கும் நியூயார்க்கில் அமைந்துள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தால் இந்த சாதனையானது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் விலை, கடந்த 1977 ஆம் ஆண்டில் கிறிஸ்டி ஏல நிறுவனத்தால் அதிக விலைக்கு விற்கப்பட்ட டைனோசரின் விலையை காட்டிலும் நான்கு மடங்கு அதிகம்.

8 டன் எடையுள்ள டி-ரெக்ஸ் டைனோசர் புதைபடிவம்!
ஆராய்ச்சியாளர்களால் BHI 3033 என்று அறியப்பட்ட டி-ரெக்ஸ் புதைபடிவமானது, சுமார் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டான் சேக்ரிசன்(Stan Sacrison) என்ற தொல்லுயிர் ஆராய்ச்சியாளரால் கண்டறியப்பட்டது. அதனால் இதற்கு ‘ஸ்டான்’ என பெயரிடப்பட்டு பிரபலமானது.
இதனை அவர், கடந்த 1987 ஆம் ஆண்டில் தெற்கு டகோட்டாவின் (South Dakota) நகரத்திற்கு அருகிலுள்ள ஹெல் க்ரீக் மலைப்பகுதியில் (Hell Creek) கண்டுபிடித்துள்ளார்.
டி-ரெக்ஸ் புதைபடிவமானது, உயிருடன் இருக்கும்போது சுமார் 8 டன் எடை கொண்டுள்ளது. இதன் உயரம் 13 அடி (4 மீட்டர்) மற்றும் நீளம் 40 அடி (12 மீட்டர்) கொண்டது.
இதனுடைய, தலை மற்றும் கழுத்து பகுதிகளில் சண்டை போட்டதற்காக அடையாளங்கள் தென்பட்டதாக தொல்லுயிர் ஆராய்ச்சியாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 நிமிடத்தில் 201 கோடிக்கு ஏலம்!
ஏலம் தொடங்கிய இரண்டு நிமிடங்களுக்குள் இந்த டி-ரெக்ஸ் புதைபடிவமானது 66 கோடி ($9 மில்லியன்) தொகையையும், அடுத்த 14 நிமிடங்களுக்குப் பிறகு 201 கோடி ($27.5 மில்லியன்) ஏலத்தொகையை எட்டியதாக The New York Times பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இதை வாங்கியவர் யார் என தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
தொல்லுயிர் ஆராய்ச்சியாளார்கள் கடிதம்!
கடந்த 1902 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 50 T-Rex டைனோசர் புதைபடிவங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய புதைபடிவங்களை தனியார் நிறுவங்கள் ஏலம் எடுப்பதால், அவற்றை ஆராய்ச்சி செய்வதில் தொய்வு ஏற்படுவதாக தொல்லுயிர் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எனவே, இது போன்ற தனியார் விற்பனையை கட்டுப்படுத்துமாறு, ஏல நிறுவனமான கிறிஸ்டி சொசைட்டிக்கு தற்போது தொல்லுயிர் ஆராய்ச்சியாளார்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த டி-ரெக்ஸ் புதைபடிவமானது இயற்கை வரலாற்றின் அருங்காட்சியகத்தால் சுமார் 61 கோடிக்கு ($8.36 மில்லியன்) கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.