Home விலங்குகள் யானைகள் மற்றும் யானை இனங்கள் பற்றிய 8 உயிரியல் உண்மைகள்!

யானைகள் மற்றும் யானை இனங்கள் பற்றிய 8 உயிரியல் உண்மைகள்!

யானைகள் தேனீக்களை கண்டு அஞ்சுகின்றன. யானை தேனீக்களின் சத்தம் கேட்டு ஒலி எழுப்பும். சிறிய பூச்சியான தேனீயை கண்டு தனது காதை மடக்கி அச்சம் கொள்கிறது.

யானைகள் பூமியில் தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெரிய உயிரினம். அவை மனிதனை விட பெரிய உயிரினமாக இருந்தாலும், மனிதர்களின், சுயநலத்திற்காக அழிக்கப்பட்டு/அழிந்து வருகின்றன. பலர் இன்னமும் யானைகளை ஆச்சரியமாக பார்க்கின்றனர். இந்த யானை பற்றிய கட்டுரை சிறப்பான 8 தகவல்களை உங்களுக்கு கூற இருக்கிறது!

யானை இனங்கள்

யானைகள் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று ஆசிய யானைகள் மற்றொன்று ஆப்பிரிக்க யானைகள். ஆசிய யானைகளை விட ஆப்பிரிக்க யானைகள் பெரியதாக இருக்கும்.

ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள்
இடது புறம் இருப்பது: ஆசிய யானை | வலது புறம் இருப்பது: ஆப்பிரிக்க யானை | Credit: Britannica

ஆசிய யானைகள்

ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியா முழுவதும் வாழ்கின்றன. ஆனால், ஆசிய யானைகளில் மூன்றில் ஒரு பங்கு சிறைபிடிக்கப்படுகின்றது.

அதேபோல் ஆசிய யானைகள் அழிவு நிலையில் உள்ள விலங்கினப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த எண்ணிக்கை கடந்த 75 ஆண்டுகளில் 50 சதவீதமாக குறைந்துள்ளது.

Also Read: வேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்!

ஆசிய யானை
asian elephants

ஆப்பிரிக்க யானைகள்

ஆப்பிரிக்க யானைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிகம் பங்கு வகிக்கிறது. அவை வறண்ட காலங்களில் ஆற்றின் கரையை தங்களது தும்பிக்கையால் தோண்டி மற்ற விலங்குகளுக்கு தண்ணீர் குடிக்க வழிவகை செய்கின்றது.

ஆப்பிரிக்க யானைகள் சஹாராவுக்கு கீழமைந்த ஆப்பிரிக்கா (Sub-Saharan Africa) மற்றும் காடுகள் முழுவதும் காணப்படுகிறது. அதே போல் மாலியின் சஹேல் பகுதியிலும் அதிகம் காணப்படுகின்றது.

ஆப்பிரிக்க யானை
african elephant

யானை தந்தம்

யானை தன் தந்தங்களை பல்வேறு தேவைக்காக பயன்படுத்துகின்றன. நிலத்தை தோண்ட, மரங்களின் பட்டைகளை கிழிக்க, பிற விலங்குகளிடம் இருந்து தன்னை பாதுகாக்க அவற்றை பயன்படுத்துகின்றன.

ஆசிய யானைகளில், ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் இருக்கும். பெண் யானைக்கு தந்தம் இருப்பதில்லை. ஆசிய யானைகள், பெரும்பாலும் தந்தங்கள் கடத்தப்படுவதற்காக கொல்லப்படுகின்றன.

ஆப்பிரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் யானைகளுக்கு தந்தங்கள் உள்ளன. இவையும் பெரும்பாலும் தந்தங்களுக்காக கொல்லப்படுகின்றது.

யானையின் தந்தம் ஒருமுறை உடைந்தால் மீண்டும் வளருவதில்லை. ஆனால், பாதியளவு உடைந்தால் வளரும். யானையிலும் வலது தந்தம் மூலம் குத்தும் யானை மற்றும் இடது தந்தம் மூலம் குத்தும் யானைகள் உள்ளன.

Did you know?
தந்தங்களுக்காக யானைகள் உலகெங்கிலும் வேட்டையாடப்படுகின்றன. இதனால் தந்தங்கள் வளராமல் யானைகள் ஆப்பிரிக்காவில் உருவாகி வருகின்றன.

குட்டி யானை

குட்டி யானை சராசரியாக 90 கிலோ எடை கொண்டிருக்கும். அவை பிறந்த ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்திற்குள் எழுந்து நிற்கும். தாய் யானை, கருவை 18 மாதம் முதல் 22 மாதங்கள் சுமக்கின்றது.

யானை பற்றிய கட்டுரை

யானையும் – தேனீயும்

யானைகள் தேனீக்களை கண்டு அஞ்சுகின்றன. யானை தேனீக்களின் சத்தம் கேட்டு ஒலி எழுப்பும். சிறிய பூச்சியான தேனீயை கண்டு தனது காதை மடக்கி அச்சம் கொள்கிறது.

யானையின் தும்பிக்கை

யானையின் மேல் உதடும் மூக்கும் ஒன்றிணைந்த உறுப்பாகும். இது மீள் விசைத்தன்மை கொண்டது. இந்த அமைப்பு யானைக்கு மட்டுமே காணப்படுகின்றது. இதில், 1,50,000 தசை நார்கள் காணப்படுகின்றன.

தும்பிக்கையை, மரங்களை எட்டி பிடிக்கவும். பெரிய பெரிய மரங்களை தூக்கவும் யானைகள் பயன்படுத்துகின்றன. தும்பிக்கை துண்டிக்கப்பட்டால் யானையால் உயிர் வாழ முடியாது. மனிதனில் மொத்த உடலில் உள்ள சதையை விட யானையின் தும்பிக்கையில் உள்ள தசை அதிகம்.

யானை உணவு

யானைகள் ஒவ்வொரு நாளும் 12 லிருந்து 15 மணிநேரம் தாவரங்கள் மற்றும் பழங்களை சாப்பிட செலவிடுகின்றன. அவை தந்தங்களை பயன்படுத்தி உணவுகளின் வாசனையை அறிகின்றது. ஒரு வளர்ந்த யானை நாள் ஒன்றுக்கு 150 கிலோ எடை உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்.

யானைகள் பற்றி மேலும் பல ஆச்சரிய உண்மைகளை தெரிந்துகொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.

NO COMMENTS

error: Content is DMCA copyright protected!