காட்டில் வாழும் பெரிய விலங்குகளில் ஒன்று புலி. புலி, பூனை குடும்பத்தை சேர்ந்தது. புலியின் உடலானது செங்குத்தான கருப்பு நிற கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற மென்மையான மயிர்களையும் வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டு இருக்கும். புலிகள் மாமிசங்களை உண்ணும். புலிகள் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் இங்கே…
பூனை குடும்பம்
புலி (Panthera tigris) என்பது பூனைக் குடும்பத்தை சேர்ந்தது. புலி பாலூட்டி வகையை சேர்ந்தது. பேரினம் பெரும்பூனை.
புலிகள் வாழ்விடம்
புலிகள் பெரும்பாலும் மறைவிடம், அதிகம் இரை உள்ள இடம், நீர்நிலைகளின் அருகில் காணப்படும். சைபீரிய வெப்பக் காடுகள் தொடங்கி இந்தியத் துணைக்கண்டம் மற்றும் சுமத்திரா தீவுப் பகுதிகளில் உள்ள வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காடுகள் வரை பரவலாகக் காணப்படுகின்றன.
புலியின் எடை
அமுர் அல்லது சைபீரியன் புலி 660 பவுண்டுகள் வரை எடையுள்ளதாக இருக்கும். சுமத்ரா தீவில் காணப்படும் புலிகள் மிகச் சிறியது. ஆண் புலிகளின் எடை 310 பவுண்டுகள். பெண்கள் புலிகள் அனைத்து கிளையினங்களிலும் ஆண்களை விட குறைவாகவே எடை கொண்டது.
புலிகள் பாலூட்டி வகையை சேர்ந்தது. புலிகள் மாமிசம் மட்டுமே உண்ணும். மான், காட்டுப்பன்றி, மறிமான், எருமை போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும்.
புலிகள் நீந்தும்

புலிகள் நன்கு நீந்துபவை. வேட்டையாடவும், ஆறுகளை கடக்கவும், பெரும்பாலும் குளங்கள் அல்லது நீரோடைகளில் குளிர்ச்சிக்காகவும் நீரில் நீந்தி செல்கிறது.
புலியின் உறுமல்
புலியின் உறுமல் மூன்று கிலோமீட்டர் தொலைவு வரை கேட்க முடியும்.
புலியின் வேட்டை
புலிகள் இரவில் வேட்டையாடும். பொதுவாக தனியாகவே வேட்டையாடும் விலங்கு. பதுங்கி இருந்து எதிரியை தாக்கும். புலிகள் பெரிய விலங்குகளை வேட்டையாடும் போது தன் முன்னங் கால்களால் இழுத்து தரையில் தள்ளுகிறது. தன் இரை சாகும் வரை அதன் கழுத்தை கடித்து நெருக்குகிறது.
புலி ஓடும் வேகம்
புலிகள் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது. புலியின் பின்னங் கால்கள் அதன் முன்னங் கால்களை விட நீளமாக உள்ளன. புலிகள் ஒரே தாவலில் 20 – 30 அடி முன்னோக்கி பாயும் திறனைக் கொண்டது.
புலியின் வகைகள்
வங்கப் புலி, இந்தோசீனப் புலி, மலேசியப் புலி, சுமத்திராப் புலி, சைபீரியப் புலி, தென்சீனப் புலி, தங்கநிறப் பட்டைப் புலிகள், மால்டீஸ் புலி, பலகைக் கல்நிறப் புலி.
புலியின் இனப்பெருக்கம்

பொதுவாக புலிகள் நவம்பர் முதல் ஏப்ரல் வரை புணர்ச்சியில் ஈடுபடுகிறது. புலிகள் தங்கள் குட்டிகளை ஈன்றெடுக்க 16 வாரங்கள் ஆகும். 3 முதல் 4 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். பிறந்த குட்டிகளின் எடை 1 கி.கி இருக்கும். பெண்புலிகள் பாலின முதிர்ச்சி அடைய 3-4 ஆண்டுகள் வரை ஆகும். ஆண்புலிகள் 4-5 ஆண்டுகளில் பாலின முதிர்ச்சி அடைகின்றன.
புலியின் வாழ்நாள்
புலிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வாழும். வேட்டையாடுதல் மற்றும் பிற விலங்குகளால் எந்த ஒரு பாதிப்பும் நேராமல் இருந்தால் காடுகளில் வாழும் புலிகள் 26 வருடங்கள் வரை வாழும்.
Also Read: கழுகு பற்றிய 8 வியப்பூட்டும் தகவல்கள்.!
நன்றாக சிந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் புத்திசாலித்தனமான 10 விலங்குகள்