விலங்குகளில் நுண்ணறிவை புரிந்துகொள்வது எளிதானது. ஆனால் நீங்கள் நினைப்பதை விட புத்திசாலித்தனமாக இருக்கும் பல இனங்கள் உள்ளன. இங்கே மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
1. காகங்கள்

காகத்தின் குடும்பம் மொத்தமுமே புத்திசாலித்தனமானவைதான். இதில் காகங்கள், ராவென்கள், ரூக்குகள், ஜாக்டாவ்கள், ஜேய்கள், மேக்பைகள், ட்ரீபைகள், சாப்கள் மற்றும் நட்கிராக்கர்கள் ஆகியவை உள்ளன. காகங்களால் மனித முகங்களை அடையாளம் காண முடியும். இவை சிக்கலான கருத்துக்களை மற்ற காகங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன. எதிர்காலத்தைப் பற்றி இவை சிந்திக்கின்றன. பல வல்லுநர்கள் காகத்தின் நுண்ணறிவை 7 வயது மனித குழந்தையுடன் ஒப்பிடுகிறார்கள்.
2. சிம்பன்சிகள்

பல மரபியல் ஆய்வு முடிவுகள், மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் சிம்பன்சிக்கள் எனக் கூறுகின்றன. வெவ்வேறு ஆய்வு முடிவுகளிடையே சிறிய வேறுபாடுகள் இருப்பினும், மனிதரிலுள்ள 95-99% டி.என்.ஏ சிம்பன்சிகளில் டி.என்.ஏ. வை ஒத்திருப்பதாக அறியப்படுகின்றது. இவற்றால், உணர்ச்சிகளைக் காண்பிக்கவும் மற்றும் ஒரு கண்ணாடியில் தங்களை அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும். மனிதர்களுடன் தொடர்புகொள்வதற்கு சிம்ப்கள் சைகை மொழியைக் கற்றுக்கொள்ளலாம்.
3. யானைகள்

நிலத்தில் உள்ள விலங்குகளிலேயே மிகப்பெரிய மூளை யானைகளுக்கு உள்ளது. யானையின் மூளை, மனித மூளையைப் போலவே பல நியூரான்களைக் கொண்டுள்ளது. யானைகளுக்கு நினைவுத்திறன் உள்ளது. யானைகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புடன் வாழ்கின்றன. பறவைகளை போலவே இவை விளையாட்டவும் செய்கின்றன.
4. கொரில்லா

மனிதர்கள் மற்றும் சிம்பன்சிகளை போலவே, கொரில்லாக்களும் விலங்குகளாகும். கொரில்லாக்களால், மனிதர்களுடன் தொடர்புகொள்வதற்கு வாக்கியங்களை உருவாக்க முடியும். மிகவும் சிக்கலான கருத்துகளையும் புரிந்து கொள்ள முடியும். மேலும் பொருள்களைக் குறிக்க சின்னங்களைப் பயன்படுத்துவதையும் இவற்றால் புரிந்து கொள்ள முடியும்.
5. டால்பின்கள்

பறவைகள் மற்றும் விலங்கினங்களைப் போல டால்பின்கள் புத்திசாலிகள். டால்பின் அதன் உடல் அளவோடு ஒப்பிடும்போது பெரிய அளவிலான மூளையைக் கொண்டுள்ளது. கண்ணாடியில் சுய பரிசோதனை செய்ததில் தேர்ச்சி பெற்ற ஒரே கடல் விலங்குகள் டால்பின்கள்.
6. பன்றிகள்

பன்றிகளால் உணர்ச்சிபூர்வமான காட்சிகளைப் புரிந்துகொண்டு வெளிப்படுத்த முடியும். பன்றிக்குட்டிகளால், மனிதர்களை விட இளம் வயதிலேயே பிரதிபலிப்பை புரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு கண்ணாடியில் உணவைக் காணும் ஆறு வார வயதுடைய பன்றிக்குட்டிகள், மிக சரியாக உணவு வைக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டது. .
7. ஆக்டோபஸ்கள்

முதுகெலும்பில்லாத உயிரினங்களிலேயே மிகபெரிய மூளை கொண்டது ஆக்டொபஸ். ஓட்டோ என்ற ஆக்டோபஸ், இதனால் கற்களை வீசுவது, தண்ணீரை பீய்ச்சி அடிப்பது என கருவிகளை கையாள முடியும்.
8. கிளிகள்

கிளிகள் ஒரு மனித குழந்தையைப் போலவே புத்திசாலி என்று கருதப்படுகிறது. இந்த பறவைகள் புதிர்களைத் தீர்க்கின்றன. கிளிகள் மனித சொற்களைக் கற்றுக் கொண்டு பேச முடியும்.
9. நாய்கள்

மனிதனின் சிறந்த நண்பன் நாய்கள். நாய்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கின்றன. குறியீட்டு மொழியைப் புரிந்துகொள்கின்றன. நுண்ணறிவு நிபுணர் ஸ்டான்லி கோரனின் கூற்றுப்படி, நாய்கள் சுமார் 165 மனித சொற்களைப் புரிந்துகொள்கின்றன.
10. ரக்கூன்

யு.எஸ்.டி.ஏ தேசிய வனவிலங்கு மையம் மற்றும் வயோமிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ரக்கூன்களுக்கு மார்ஷ்மெல்லோக்கள் மற்றும் சில கூழாங்கற்களைக் கொண்ட ஒரு கூஜாவில் தண்ணீரைக் கொடுத்தனர். மார்ஷ்மெல்லோக்களை அடைய, ரக்கூன்கள் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டியிருந்தது. ரக்கூன்கள், மார்ஷ்மெல்லோக்களைப் பெறுவதற்கு கூழாங்கற்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடித்தது.