உடும்பு எப்படி இருக்கும்
உடும்பு ஓர் ஊர்வன உயிரினம். பல்லி வகையைச் சார்ந்தது. 20 செ.மீ முதல் 3 மீ (10 அடி) வரை வளரும் உடும்பும் உள்ளது. நீண்டு வளர்ந்த கழுத்து, நாக்குகள் நீளமானது, வலுவான கால்கள், நீண்ட நகங்கள் கொண்டது. இந்த உயிரினம் நீரிலும் நிலத்திலும் வாழும். பெரும்பாலானவை நிலத்தில் வாழ்கிறது. மரங்களிலும் நீரிலும் வாழ்கிறது.
உடும்பு வாழும் நாடுகள்
சஹாராவின் தெற்கே ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகள், தென் சீனக் கடல் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
உடும்பு வகைகள்
80 க்கும் மேற்பட்ட உடும்பு வகைகள் உள்ளது. நைல் உடும்பு, ஆசிய நீர் உடும்பு, எமரால்டு மர உடும்பு, கொமோடோ டிராகன், முதலை உடும்பு, நீல வால் உடும்பு என பல்வேறு வகைகள் உள்ளன.
உடும்பு எடை
கொமோடோ டிராகன் சுமார் 70 கிலோகிராம் (150 பவுண்டு) எடை கொண்டது. கின்னஸ் உலக சாதனைப் படி சராசரியாக வயது வந்த ஆண் கொமோடோ உடும்பு 79 முதல் 91 கிலோ எடையும், 2.59 மீ அளவும், சராசரியாக பெண் கொமோடோ உடும்பு 68 முதல் 73 கிலோ எடையும் மீ (7.5 அடி) அளவும் கொண்டிருக்கும்.
உடும்பு முட்டைகள்
7 முதல் 37 வரையான முட்டைகள் இடும். மண்ணுக்குள் அல்லது மரப் பொந்துக்குள் முட்டைகளை மறைத்துக் பாதுகாக்கின்றன.

உடும்பு வாழ்விடம்
நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். சில வகைகள் மரங்களிலும் சில வகைகள் நீரிலும் வாழ்கிறது.
மாமிச உணவுகள், முட்டை, சிறிய ஊர்வன, மீன், பறவைகள், பூச்சிகள் மற்றும் சிறிய பாலூட்டிகள் போன்றவற்றை சாப்பிடுகின்றன. சில உடும்புகள் பழம் மற்றும் தாவரங்களையும் சாப்பிடுகிறது.
உடும்பு ஆயுட்காலம்
8 முதல் 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சி அடைகின்றன. கொமோடோ டிராகனின் ஆயுட்காலம் தோராயமாக 30 ஆண்டுகள்.
மருந்து
இறைச்சிக்காகவும் மருந்துக்காகவும் உடும்பு உண்ணப்படுகிறது. குறிப்பாக நாக்கு மற்றும் கல்லீரல், இந்தியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் உண்ணப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும், வடகிழக்கு இந்தியாவில் குறிப்பாக அசாமிலும் உடும்பு வெவ்வேறு பகுதிகள் பல்வேறு மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
உடும்பின் தோல் எதற்கு பயன்படுகிறது?
கர்நாடக இசை தாளக் கருவியை உருவாக்க உடும்பின் தோல் கஞ்சிரா எனப்படும் ஒரு இசை கருவியை உருவாக்க பயன்படுகிறது.