டால்பின் பற்றிய விசித்திரமான 10 தகவல்கள்!

Date:

பாலூட்டி

டால்பின் என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி வகை உயிரினமாகும். டால்பின் உடல் திமிங்கலம் போன்று இழை வடிவம் உடையது. வால் மற்றும் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையாக உள்ளது. அதன் மூக்கு கூர்மையாய், விளிம்பில் சுழியுடையதாக காணப்படுகிறது.

டால்பின் எடை, உயரம்

டால்பின்கள் சுமார் 1.2 மீட்டரிலிருந்து 9.5 மீட்டர் நீளம் வளரும். 40 கி.கி முதல் 10 டன் வரை எடையும் கொண்டன.

இரண்டு வயிறுகள்

டால்பின்களுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன. ஒன்று உணவு சேமிப்பிற்கும் மற்றொன்று செரிமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

டால்பின் வகைகள்

சுமார் 40 வகையான டால்பின் இனங்கள் 17 வகையான பேரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட மூக்கு டால்பின், மூக்கு டால்பின், பசிபிக் பாட்டில் மூக்கு டால்பின், பசிபிக் திமில் டால்பின், வெள்ளை டால்பின், கூரிய பற்களுடைய டால்பின், வெள்ளை பக்க டால்பின், அமேசான் ரிவர் டால்பின், சீன நதி டால்பின் கங்கை நதி டால்பின், சிந்து நதி டால்பின் போன்றவை சில இனங்கள் ஆகும்.

டால்பின் ஒலி

ஒவ்வொரு மனிதர்களுக்கும் கை இரேகையைப் இருப்பது போல் ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்துவமான சீட்டி ஒலியை எழுப்புகின்றன. ஒவ்வொரு டால்பின் ஒலியும் தனித்தன்மை வாய்ந்தவை. டால்பின்கள் வேட்டைக்கு செல்லவும் மற்றும் பிற டால்பின்களை தொடர்பு கொள்ளவும் ஒலி எழுப்புகிறது. ஒலியை மிகவும் வித்தியாசமாக பயன்படுத்துகின்றன.

டால்பின் உணவு

டால்பின்கள் ஊனுண்ணிகள். டால்பின்கள் பலவிதமான மீன், ஸ்க்விட், இறால், ஜெல்லிமீன் மற்றும் ஆக்டோபஸ்கள் போன்றவற்றை உட்கொள்கின்றன. டால்பின்கள் உண்ணும் மீன் மற்றும் பிற உயிரினங்களின் வகைகள் டால்பின் இனத்தையும், அவற்றின் வாழ்விடங்களையும் சார்ந்துள்ளது.

டால்பின் ஆயுள்

பொதுவாக இவை 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. பாட்டில் மூக்கு டால்பின் 40 ஆண்டுகள் வரை வாழும். 40 ஆண்டுகள் என்பது வாழும் சூழ்நிலை மட்டும் வகைகளை பொருத்து மாறுபடும்.

அறிவுக்கூர்மை கொண்ட டால்பின்

dolphin 1019615 640 min
mikakaptur 

ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன. சில இனங்களுக்கு 250 பற்கள் வரை முளைக்கும்.டால்பின்கள், தங்கள் தலைக்கு மேல் உள்ள உறிஞ்சும் துளை மூலம் மூச்சுவிடுகின்றன. அதன் மூச்சுக் குழல் மூளைக்கு மேல்புறமாக உள்ளது. டால்பின் பெரிய மற்றும் மிகவும் சிக்கலான மூளையைக் கொண்டது.

டால்பின்கள் வசிக்குமிடம்

உலகம் முழுவதும் இவை காணப்படுகின்றன. கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம். பெரும்பாலான டால்பின்கள் கடல் மற்றும் கடலோரங்களில் கடலில் அல்லது உப்புநீரில் வாழ்கின்றன. தெற்காசிய நதி டால்பின் மற்றும் அமேசான் நதி டால்பின் அல்லது போடோ போன்ற ஒரு சில இனங்கள் நன்னீர் நீரோடைகள் மற்றும் ஆறுகளில் வாழ்கின்றன.

வேகமாக நீந்தும்

டால்பின்கள் பொதுவாக வேகமாக நீச்சல் அடிக்கும். இதன் நீள் வடிவ உடல் வால் பிரிவில் உள்ள பெக்டோரல் துடுப்புகள் திசை கட்டுப்பாடு திறனையும் வால் துடுப்பு முற்செலுத்தும் திறனையும் கொண்டிருக்கிறது. டால்பின்கள் நீந்தும் போது முதுகு துடுப்பு உறுதித்தன்மையை வழங்குகிறது.

Also Read: ஆக்டோபஸ் பற்றிய வியப்பூட்டும் 12 தகவல்கள்!

கழுகு பற்றிய 8 வியப்பூட்டும் தகவல்கள்.!

முதலை பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!