முதலை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அதன் பெரிய நீண்ட வால், கூர்மையான பற்கள் மற்றும் பெரிய வாய் இதுதான் நம் நினைவுக்கு முதலில் வரும். முதலையின் உணவுமுறை, வாழ்விடம், வகைகள், போன்றவற்றை இந்த பதிவில் காணலாம். முதலை பற்றிய சுவாரசியமான பல தகவல்கள்…
முதலை எடை
பொதுவாக, முதலைகள் வெப்ப மண்டல ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழ்கின்ற ஊர்வன இனத்தைச் சேர்ந்தது. முதலைகள் ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் பெரிய ஊர்வனவாகும். கெய்மன்கள், கரியல்கள் மற்றும் முதலைகள் உள்ளன. 13 வகையான முதலைகள் உள்ளன. மிகச்சிறிய முதலை குள்ள முதலை எனவும் அழைக்கப்படுகிறது. சுமார் 5.6 அடி அதாவது 1.7 மீட்டர் நீளம் உடையது. இதன் எடை 13 முதல் 15 பவுண்டுகள் அதாவது 6 முதல் 7 கி.கி வரை எடை உடையது. மிகப்பெரிய முதலை உப்பு நீர் முதலை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரியது 20.24 அடி அதாவது 6.17 மீ நீளம் கொண்டது. அதன் எடை 2,000 பவுண்டுகள் அதாவது 907 கிலோ வரை எடையுடையது.
முதலைகள் என்ன சாப்பிடும்?
முதலைகள் மாமிச உணவுகளான இறைச்சியை மட்டுமே சாப்பிடுகின்றன. காடுகளில் கிடைக்கக்கூடிய மீன், பறவைகள், தவளைகள் மற்றும் ஓட்டுமீன்கள் போன்றவற்றை உண்ணுகிறது. மிருகக்காட்சி சாலையில் வளர்க்கப்படும் முதலைகள் ஏற்கனவே கொல்லப்பட்ட சிறிய விலங்குகளான எலிகள், மீன், வெட்டுக்கிளி போன்றவற்றை சாப்பிடுகின்றன. காடுகளில் உள்ள முதலைகள் இரையை தங்கள் பெரிய தாடைகளால் இறுகப் பிடித்து, அதை நசுக்கி, பின்னர் இரையை முழுவதுமாக விழுங்கும். மற்ற விலங்குகளைப் போல சிறிய உணவுகளை மெல்லவோ அல்லது கடிக்கவோ முடியாது. முதலைகள் வயிற்றில் உணவை அரைக்க சிறிய கற்களை விழுங்குகின்றன. முதலைகள் பல மாதங்கள் உணவு இல்லாமல் வாழ முடியும்.
முதலைகள் எங்கு வாழ்கின்றன?
ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் வெப்பமண்டல வாழ்விடங்களில் முதலைகள் காணப்படுகின்றன. அவர்கள் பொதுவாக ஏரிகள், ஆறுகள், ஈரநிலங்கள் மற்றும் சில முதலைகள் உப்பு நீர் பகுதிகளுக்கு அருகில் வாழ்கின்றது. முதலைகள் குளிர்ச்சியானவை. அவற்றினால் சொந்த வெப்பத்தை உருவாக்க முடியாது. குளிர்காலங்களில் அவை உறங்குகின்றன. நீண்ட கால வறட்சியின் போது முதலைகள் செயலற்று காணப்படும். உறக்கநிலைக்கு ஒரு இடத்தை உருவாக்க ஆற்றங்கரையின் அல்லது ஏரியின் ஓரத்தில் ஒரு பள்ளம் தோண்டி நீண்ட தூக்கத்தில் ஈடுபடுகின்றது.
சந்ததி
முதலைகள் ஒரே நேரத்தில் 10 முதல் 60 முட்டைகள் வரை இடுகின்றன. குஞ்சுகள் 55 முதல் 110 நாட்கள் வரை தங்கள் முட்டைகளில் இருக்கும். அவை பிறக்கும் போது 7 முதல் 10 அங்குலம் வரை இருக்கும். அதாவது 17.8 முதல் 25.4 செ.மீ நீளம் இருக்கும். அவை 4 வயது முதல் 15 வயது வரை முதிர்ச்சியடையாது. ஒரு முதலை எவ்வளவு காலம் வாழ்கிறது என்பது அதன் இனத்தைப் பொறுத்தது. சில முதலைகள் சுமார் 30 ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றது. சில இனங்கள் 75 ஆண்டுகள் வரை வாழ்கின்றது.
பாதுகாப்பு நிலை
கியூபா முதலை உலகின் மிகவும் ஆபத்தான முதலைகளில் ஒன்றாகும். இது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. வேட்டையாடுதல் என்பது முதலை இனங்களுக்கு ஒரு நிலையான அச்சுறுத்தலாகும்.
முதலையின் வகைகள்
கருப்பு கெய்மன், அமெரிக்க முதலை, கரியல், உப்பு நீர் முதலை, நைல் முதலை
Alligators vs crocodiles

Alligator, crocodile, இவை இரண்டும் தமிழில் முதலை என்றே இருப்பதனால் Alligator, crocodile, என் ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன்.
Alligator வேறு Crocodile வேறு. இவை இரண்டுமே முதலை இனம்தான். ஆனால் சில வேறுபாடுகள் உள்ளன. Alligator தாடை U வடிவம் கொண்டிருக்கும். Crocodile தாடை V வடிவம் கொண்டுள்ளது என்று San Diego Zoo தெரிவித்துள்ளது. முதலைகள் வாயை மூடும் போது அவற்றின் மேல் உதட்டின் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் பற்களும் உள்ளன.
Alligator மற்றும் Crocodile இடையிலான மற்றொரு வேறுபாடு என்னவென்றால், Crocodile-களுக்கு அவற்றின் நாக்கில் உப்பு சுரப்பிகள் உள்ளன. இந்த மாறுபட்ட உமிழ்நீர் சுரப்பிகள் Crocodile-கள் உப்பு நீரில் வாழ்வதற்கு உதவுகின்றன. Alligator மற்றும் கெய்மன்களின் நாக்கில் உப்பை சுரக்கும் அவ்வகை சுரப்பிகள் கிடையாது. எனவே, அவர்கள் நன்னீர் பகுதிகளில் மட்டுமே வாழ்கிறது.
முதலையின் பற்கள்

முதலையின் பல் உடையும் போது, அது விரைவாக வளர்ந்துவிடும். முதலையின் வாழ்நாளில் 8,000 பற்கள் வரை உடைந்து வளரும். முதலைகளுக்கு வியர்க்காது. குளிர்ச்சியாக இருக்க, “வாய் இடைவெளி” (mouth gaping) என்று அழைக்கப்படும் ஒரு செயல்பாட்டில் வாயைத் திறக்கிறது. இது சண்டையிடுவது போன்றது.
முதலைக் கண்ணீர்
முதலைகள் கண்ணீரை உருவாக்குகின்றன. கண்ணீர் சுரப்பிகள் அவற்றின் மூன்றாவது கண்ணிமைக்கு பின்னால் ஒரு திரவத்தை சுரக்கின்றன. சவ்வு போன்ற ஓரு திரவம் கண்ணை சுத்தம் செய்ய உதவுகிறது. முதலை சிறிது நேரம் தண்ணீரிலிருந்து வெளியேறி, கண்கள் வறண்டு போகும் வரை முதலை கண்ணீர் பொதுவாக வெளியில் தெரியாது.

ஒரு முதலை தாடைகள் ஒரு சதுர அங்குலத்திற்கு 5,000 பவுண்டுகள் அழுத்தத்தைப்கொடுக்கமுடியும். ஒரு மனிதனின் தாடை ஒரு சதுர அங்குலத்திற்கு 100 பவுண்டுகள் அழுத்தத்தை மட்டுமே கொடுக்கமுடியும். முதலையின் தாடை திறப்பு வலிமை மிகக் குறைவு. உதாரணமாக, ஒரு முதலை வாயை ரப்பர் பேண்ட் மூலம் மூடி வைக்கலாம்.
நீரிலும் நிலத்திலும் வாழும்
முதலைகளுக்கு செவித்திறன் மிகவும் கூர்மையானது. முதலைகள் மிக வேகமாக நீச்சல் அடிக்கும். இது தன் இரையை பிடிக்க உதவுகிறது. முதலைகள் 20 மைல் (32 கி.மீ) வரை நீந்த கூடியது. முதலை ஒரு மணி நேரம் நீருக்கடியில் சுவாசத்தை அடக்க முடியும். நிலத்தில், முதலைகள் வேகமாக பயணிக்காது. தண்ணீரில் அதன் பலம் அதிகம். முதலையால் 11 மைல் (17.6 கி.மீ) மட்டுமே இயங்க முடியும்.
Also Read: நன்றாக சிந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் புத்திசாலித்தனமான 10 விலங்குகள்