டைனோசர் முட்டை எவ்வாறு இருக்கும் என்று குறிப்பிட்ட சிலரைத் தவிர யாரும் நேரில் பார்த்திருக்க முடியாது. அந்த குறிப்பிட்ட சிலரும், பல ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த இடத்தை ஆய்வு செய்து கண்டறிந்த ஆராய்ச்சியாளர்களாகத் தான் இருப்பர்.
ஆனால், மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தாங்கள் கண்ணில் கண்டிராத டைனோசர் பற்றி நிச்சயம் கற்பனை இருக்கிறது. அத்தகைய டைனோசர் முட்டை பற்றிய சில அறிவியல் உண்மைகளை இங்குப் பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் பல முட்டைகள் இடும்!
பெண் டைனோசர்கள் ஒரே நேரத்தில் பல முட்டைகள் இடும் திறன் கொண்டவை. பல்லுயிரியலாளர்களின் தகவல்படி, டைனோசர்களில் சில ஒரு நேரத்தில் மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடுகின்றன. சில இனங்கள் 15 முதல் 20 முட்டைகள் இடுகின்றன. இது அந்தந்த இனத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்த முட்டைகளிலேயே அதன் குஞ்சுகள் வளர்கின்றன. ஒரே நேரத்தில் கூடுதல் முட்டைகள் இடும் திறன் அவற்றுக்குத் தேவைப்படுகிறது.
எல்லா முட்டைகளும் குஞ்சு பொறிக்காது
மெசோசோயிக் (Mesozoic) (இளம் வயது டைனோசர்கள்) மிகவும் கொடூரமானதாக இருக்கும். அவை அபடோசரஸாலின் (தாவரங்கள் உண்ணும் டைனோசர்கள்) முட்டைகளை விழுங்கி விடுகின்றன. இதில் சில குஞ்சு பொறிக்கும். அவற்றையும், மெசோசோயிக்யிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். எனவே ஒரு குஞ்சுக்கு டைனோசர்கள் அதிக அளவு முட்டைகள் இட வேண்டியிருக்கும்.
சில புதைபடிவ டைனோசர் முட்டைகளில் மட்டுமே கருக்கள் உள்ளன!
டைனோசர் முட்டைகள் புதைந்து காணப்பட்டாலும், நுண்ணறிவு செயல்முறைகள் கருவின் உள்ளே நுழைந்து விரைவாக அதை அழிக்கிறது. அதாவது, பாக்டீரியாக்கள், ஷெல்களின் உள் எளிதில் ஊடுருவுகிறது. எனவே பாதுகாக்கப்பட்ட டைனோசர் முட்டைகள் குறைவாகவே இருக்கும். ஆனால், இதுவரை கண்டறியப்பட்ட சில வகைகள் Massospondylus வகைக்குச் சொந்தமானவையாக இருக்கும்.

மெசோசோயிக் எனப்படும் டைனோசர்கள் காலத்தில் பில்லியன் கணக்கான டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்தன. அப்போது பெண் டைனோசர்கள் டிலில்லியன் கணக்கான முட்டைகளை இடுகின்றன. இவற்றைக் கண்டறிந்தது மிகவும் குறைவுதான். காரணம் அவை நீண்ட காலம் இருப்பதில்லை. அவற்றை இதுவரை கண்டறிந்தது மிகவும் அரிதான நிகழ்வு.
டைனோசர் முட்டை ஓடு!
டைனோசர் முட்டை ஓடு வித்தியாசமானதாகக் கண்டறிய முடியும். ஆனால், அது குறிப்பிட்ட டைனோசர் வகையுடையது என்று நிச்சயம் கண்டறிய இயலாது. டைனோசர் எச்சங்கள் என்பது முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், அவை சிலவேளைகளில் தவறுதலாகப் புறக்கணிக்கப்படுகிறது.

ஓஜெனெரா மூலம் அடையாளம் காணப்படும் முட்டைகள்
டைனோசர் முட்டைகள் அவ்வளவு எளிதில் அடையாளம் காணப்படுவதில்லை. ஒருவேளை புதைப்படிவங்கள் கண்டறிந்ததற்குச் சற்று தொலைவில் முட்டைகள் கண்டறியப்பட்டால், இரண்டுக்குமான தொடர்பு குறித்துக் கண்டறிய முடியாது. ஒருவேளை முட்டையின் அம்சங்கள் கொண்டு அவை இந்த குறிப்பிட்ட படிவம் கொண்ட டைனோசருடையதா என்பதைக் கண்டறியலாம். ஓஜெனெரா (oogenera) எனப்படும், வகையில் பிரித்துக் கண்டறிய இயலும்.
முட்டையின் அளவு
டைனோசர் முட்டைகள் எந்த அளவு பெரியதாக இருக்கும் என்பதற்கான சரியான தடையங்கள் இல்லை. ஆனால், 2 அடிக்கு அதிகமான அளவில் டைனோசர் முட்டை வளருவதில்லை. ஒரு பெரிய டைனோசர் முட்டை கண்டறியப்பட்டால், அது தற்போதைய கோட்பாடுகளை மாற்றி அமைக்கும்.
பறவை முட்டைகளின் வடிவம்
பறவைகளின் முட்டைகள் பெரும்பாலும், ஓவல் வடிவத்தில் இருக்கும். அந்த முட்டைகள் இடுவது அவற்றுக்குக் கொஞ்சம் எளிதான காரியம் தான். ஆனால், டைனோசர் முட்டைகள் கோள வடிவிலேயே இருக்கின்றன. சிலவற்றை முற்றிலும் வட்ட வடிவத்தையும் நீள வடிவத்தையும் கொண்டிருக்கும்.
நீளமான டைனோசர் முட்டை
தெரோபாட் (இறைச்சி உண்ணும் டைனோசர்) முட்டைகள் நீளமாகவும் அகலமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சௌரோபோட் (sauropods) ஆர்னிதோபாட்கள் (ornithopods) மற்றும் இலை தளைகள் உண்ணும் டைனோசர்களின் முட்டைகள் கோள வடிவத்தில் கண்டறியப்பட்டுள்ளது. கூடுகள் கண்டறியப்பட்ட இடத்தில் முட்டைகள் கொத்தாக இருந்துள்ளது. ஆனால், அவற்றைப் பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.
பெரம்பலூர் டைனோசர் முட்டை?
நீங்கள் இருக்கும் இடத்தில் ‘டைனோசர் முட்டை’யைக் கண்டறிந்தால், அது நீங்கள் நினைத்தபடி அது அவற்றின் முட்டையாக இருக்க வாய்ப்பு இல்லை. உங்களுக்கு அப்படி எதாவது தோன்றியிருந்தால் அவை ஓஜெனஸுடன் (oogenus) பொருந்த வேண்டும். ஒருவேளை பல ஆண்டுகளுக்கு முந்தைய கோழி அல்லது வழக்கத்துக்கு மாறான கல் ஒன்றை நீங்கள் கண்டறிந்திருக்கலாம்.
டைனோசர் முட்டைகள் பற்றி சமூக வலைத்தளத்தில் பரவலாகப் பல தகவல்கள் வெளியாகி வந்தன. அதனால், ThoughtCo எனும் தளத்தின் கட்டுரையை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
Source: Strauss, Bob. “10 Facts About Dinosaur Eggs.” ThoughtCo, Aug. 28, 2020, thoughtco.com/facts-about-dinosaur-eggs-1092047.